எனக்கு புரிஞ்சது

Survival of the Fittest – வலியது பிழைக்கும்

டார்வின் கோட்பாடு

பகுத்துண்டு பல்லுயிர் ஓம்புதல் நூலோர்

தொகுத்தவற்றுள் எல்லாந் தலை.

உலகில் எல்லா உயிர்களும் தழைத்து வாழ வேண்டும் என்பது வள்ளுவருக்கும், வள்ளலாருக்கும் தனிப்பட்ட அவா கிடையாது. அது படைப்பின் விதி. ஆனால், பிற உயிர்களை அழிப்பது பற்றிய பெரும்பாலான விவாதங்களில், பட்டிமன்றங்களில் எல்லாம் நான் அதிகம் கேட்ட ஒரு வாதம், Survival of the Fittest அதாவது, வலியது பிழைக்கும் எனும் அபத்தம்.
பிற உயிர்களை ஆதிக்கம் செலுத்தி, வலிமையினால் ஓங்கி நிற்கும் உயிரினங்களே பிழைத்திருக்கும். எனவே மனிதர்கள் ஆதிக்கம் செலுத்தித் தான் பிழைக்க வேண்டும், பிற உயிர்களை வேட்டையாடுதல், அழித்தல், கொன்று குவித்தல் போன்றவை தவறில்லை எனும் மிகத் தவறான ஒரு புரிதல்.

இந்தக் கோட்பாட்டை உண்மையில் உரைத்த டார்வின் எந்த அர்த்தத்தில் இதனை சொல்லியிருப்பார் என்பதை ஆராய்ந்த போது, இது எவ்வளவு தவறாக புரிந்து கொள்ளப்பட்டிருக்கிறது என்றும், நமது சமகால வாழ்வியல் பிரச்சினைகளில் இது எப்படி பிரதிபலிக்கிறது என்பதும் உணர்த்தப்பட்டது.

மேலே படத்தில் காண்க, டார்வின் Fittest என குறிப்பிடுவது வலியது, ஆதிக்கம் செலுத்துவது எனும் ரீதியில் அல்ல. அதன் படி பார்த்தால் காட்டில் சிங்கங்கள் மட்டுமே இருக்கும். பிற இனங்கள் அழிந்திருக்கும், இயற்கையாகவே.

அவர் கூற்று, இனப்பெருக்கத்தை குறிப்பதாக இருக்கிறது. எந்த உயிரினம் தன் இனப்பெருக்கத் தகுதியை இழக்காமல் இருக்கிறதோ, அந்த உயிரினமே பிழைக்கும். தழைக்கும். செழிக்கும். இன்று உலகில் பல உயிரினங்கள் அழிந்ததற்கு காரணம், மனிதர்களின் செயல்களால் ஏற்பட்ட வேட்டை, காடுகள் அழிப்பு போன்றவற்றால் அவைகளின் இனப்பெருக்கம் தடைப்பட்டது மட்டுமே.

வினைத் தொடர்ச்சி:

நாம் செய்த இந்த வினை இன்று நம்மை தாக்குகிறது. எப்படி என்று கேட்கிறீர்களா? மனித இனம் தனது Fittest தகுதியை Fit-ஐ இழந்து வருகிறது. பல்லுயிர்ப்பெருக்கத்தை நாம் ஆதிக்கம் செலுத்துவதாக நினைத்து தடை செய்தோம். நம் அறிவினால் எதையும் சமாளிக்கலாம் என்று இறுமாந்திருந்தோம். ஆனால் இன்று நம் இனமே அழியத் தொடங்கி உள்ளது. கிராமங்கள், சிறு நகரங்களில் கூட பெருகி இருக்கும் கருத்தரிப்பு மையங்களும், ஊனமாய் பிறக்கும் குழந்தைகளும், குழந்தையின்மையினால் தவிக்கும் தம்பதிகளுமே இதற்கு சான்று.

ஊழ்வினை உறுத்து வந்து ஊட்டும்

எனவே இனியேனும் நாம் பல்லுயிர்ப் பெருக்கத்தை ஊக்குவித்தல் நமக்கு சாலச்சிறந்தது. இந்த ஊழிக்காலத்தில் நாம் சிந்திக்க வேண்டிய ஒரு விசயமாக இது இருக்கிறது.

0
உங்கள் மின்னஞ்சலில் என் கிறுக்கல்கள் வேண்டுமா?

Ready for the Leap?

Now rev-up your creative engines and wait for my E-mail! I will get in touch with you as soon as humanly possible!

WhatsApp me if you have any questions