கவித கவித!

தோணிச்சு!

செஞ்சொற்ச்சுனை

தனைக்கண்டேன்

அதில் வெஞ்சிற்பிறை

விழக்கண்டேன்

தீஞ்சொற்றுளிகளை

அள்ள,

பிறைகள் இறைந்திடல் கண்டேன்!

நெஞ்சிற்கிளர்ந்திடும் காதல்,

துஞ்சற்கஞ்சிடும் கண்கள்

அவை கவிதைகள் புனைந்திட

இரவினைக் கடந்தேன்!


உன் நினைவுகளின் தொகுப்பு,

விந்தையானதொரு கடல்…

அதில் மூழ்குவது இன்பம்,

நீந்திக் கடப்பது துன்பம்!


திசையறியாமல் நடந்து கொண்டே சிறு கல்

ஒன்றை காலால் தட்டி எங்கோ

அழைத்துச் செல்கிறேன்…

போகும் இடம் பற்றிக்

கேள்வி கேட்காமல்

குதூகலமாய் குதித்துச்

செல்கிறது கல்,

கவலை மறக்கிறேன் நான்…

பள்ளிப்பருவமும், ஒற்றையடிப் பாதையும்!


கண்டதும் காதல் என்பதில் நம்பிக்கை இல்லை எனக்கு!

உன்னைக் கண்டதும் கோபம் தான் வந்தது,

இந்த தேவதைக்கு பூமியில் என்ன வேலை என்று!


விநோதம் நீயென்று நினைத்தேன்,

இல்லை இல்லை,

அதனினும் வினோதம்

என்னுடன் நீ

என்பதை உணர்ந்தேன்!


அமைதியாயிரு அமைதியாயிரு

என்றே என் மனதுக்குள் ஒரு

பெருங்கூச்சல்

பேசிவிடு, பேசிவிடு என்றே

உன் உதடுகளில் ஒரு

பேரமைதி!


என் இதயத்தின் வால்வுகள் எல்லாம்

உன் வாழ்வை வளமாக்கவே இயங்கிக்கொண்டிருக்கும்

இப்படிக்கு காதலன்


மறுகண்ணத்திலும் அறைபவன்

கூட இந்த ஜகத்தில் இருக்கிறான்

உணர்ந்தவன் ஞானி!


விதைக்குள் உறங்கும் வனங்கள் போல்

எனக்குள் உறங்குகிறது

உனக்கான காதலுங்காமமும்!

எங்கிருக்கிறாய்!


இதெல்லாம் அப்பப்ப எனக்கு தோன்றிய கவிதை முத்துக்கள்! படிச்சு பயன் பெற்றமைக்கு நன்றி!

0

Ready for the Leap?

Now rev-up your creative engines and wait for my E-mail! I will get in touch with you as soon as humanly possible!

WhatsApp me if you have any questions