கேள்வி

அறிவியலின் எதிர்காலம் என்னவாக இருக்கும்?

என் பதில்

என் தாத்தா கிராமபோன் ரெகார்டில் இசை கேட்பதற்கும் என் தந்தை பானசோனிக் ரேடியோவில் இசை கேட்பதிற்கும் இடையே 40 வருடங்கள் கடந்து விட்டன.

என் தந்தை ரேடியோவில் இருந்து தொலைக்காட்சியில் கலர் படம் பார்க்கும் இடைவெளியில் 20 ஆண்டுகள் கடந்து விட்டன.

நான் கலர் டிவியில் இருந்து கைப்பேசியில் என்னை நானே வீடியோ எடுத்து ஒளிபரப்பக்கூடிய நிலையை அடைய 10 ஆண்டுகள் கூட முழுமையாக ஆகவில்லை.

ஆக எதிர்காலத்தில் அறிவியலின் வளர்ச்சி exponential ஆக இருக்கும் என்பதில் ஐயமில்லை. ஆனால் என் தாத்தா காலத்தில் இருந்த எளிய வாழ்வியலோ, என் அப்பா காலத்தில் இருந்த அழகான ஊர்களோ, என் குழந்தைப்பருவத்தில் இருந்த விழி விரியும் fascination நொடிகளோ என் பிள்ளைகளுக்கு அறிவியலால் அளிக்க முடியுமா என தெரியவில்லை.

2 வயதிலேயே போர் அடிக்கிறது அவர்களுக்கு, 3 வயது நிரம்புவதற்குள் டென்ஷன் ஆக இருப்பதாக சொல்கிறார்கள்.

அறிவியலின் வளர்ச்சி இந்த தலைமுறையின் வரமாக இருக்குமா, சாபமாக இருக்குமா அறியேன்.

அறிவு சார்ந்த வாழ்வியலுக்கும் அறிவியல் சார்ந்த வாழ்வியலுக்கும் வித்தியாசம் இருக்கிறதல்லவா?

கேள்விக்கு நன்றி.

0

இந்த இடுகையை கோராவில் காண்க

தமிழ் கோரா இணையதளத்தில் என்னுடன் இணைந்திடுங்கள்!

Ready for the Leap?

Now rev-up your creative engines and wait for my E-mail! I will get in touch with you as soon as humanly possible!

WhatsApp me if you have any questions