கேள்வி

இவ்விரண்டில் I will come tomorrow அல்லது I’m coming tomorrow எது சரியானது?

என் பதில்

இரண்டுமே சரியானவை தான். ஆனால் உபயோகம் மாறுபடும்.

எ.கா : தற்சமயம் நீங்கள் என் வீட்டுக்கு நாளை வருவதாக முடிவு செய்திருந்தால், என்னுடன் உரையாடும்போது I will come tomorrow என்று சொல்லலாம்.

ஏற்கனவே நீங்கள் முடிவு செய்திருந்தால், அதாவது, நம் உரையாடலுக்கு முன்பே என் வீட்டுக்கு வருவதாக முடிவு செய்திருந்தால் I am coming tomorrow என்று சொல்லலாம்.

அடிப்படை வித்தியாசம் கீழ்க்கண்டவாறு,

I will come tomorrow – நான் நாளை வருவேன்

I am coming tomorrow – நான் நாளை வருகிறேன் (நாளைக்கு வரேன்)

will என்பது உறுதியான ஒரு முடிவையும் coming என்பது உறுதியானாலும் சற்றே குறைந்த முக்கியத்துவம் வாய்ந்ததாக, எதார்த்தமாக அர்த்தம் தருகிறது.

0

இந்த இடுகையை கோராவில் காண்க

தமிழ் கோரா இணையதளத்தில் என்னுடன் இணைந்திடுங்கள்!

Ready for the Leap?

Now rev-up your creative engines and wait for my E-mail! I will get in touch with you as soon as humanly possible!

WhatsApp me if you have any questions