கேள்வி

எந்த ஒரு செயலும் என்னை பாதிப்பதோ அல்லது பரவசப்படுத்துவதோ இல்லை, இது மன அழுத்தமா அல்லது மன முதிர்ச்சியா?

என் பதில்

சில சமயஙகளில் எனக்கும் இவ்வாறு இருந்ததுண்டு. செயல்களா அல்லது நிகழ்வுகளா, எது உங்களை பாதிப்பதில்லை என்பதில் தெளிவு வேண்டும்.

செயல்கள் பாதிக்காமல் இருப்பது, ஈடுபாடின்மையாக இருக்கலாம். நிகழ்வுகள் பாதிக்காமல் இருப்பது நிச்சயம் மன முதிர்ச்சியே! சொரணை கெட்டவன் என்று பெயர் வாங்கிய அனுபவங்கள் எனக்குண்டு, ஆனால் அதில் கிடைத்த அமைதி இன்று வரை நிலைத்து வளர்கிறது. நடப்பனவெல்லாம் நேர்மறையாகவே !

ஒரு வேளை நான் சொரணை உடையவன் என்று நிரூபித்திருந்தால், அந்த சூழ்நிலை என்னை வேறு விதமாக திருப்பியிருக்கும்! ஆனால் அந்த நிகழ்வின் பாதிப்பை நான் உணரவில்லை, அமைதி காத்தேன், அமைதியாகவே வாழ்கிறேன்!

அந்த நிகழ்வின் மறு பக்கம் இருந்த நபர், இப்போது எப்படி இருக்கிறார், எங்கு இருக்கிறார் என்று கூட எனக்கு தெரியாது! நன்றாக இருக்கட்டும் என்று மட்டும் நினைத்துக்கொள்வேன்.

பாதிக்காத நிகழ்வுகளைக் காட்டிலும் பரவசப்படுத்திய நிகழ்வுகள் நிறைய உண்டு! பரவசத்தின் இன்பத்தை அனுபவிக்கும் போதெல்லாம் இறைவனை நினைத்து நன்றி சொல்லி அந்த உணர்வை பிரதிபலிக்கிறேன்.

கேள்விக்கு நன்றிகள் மற்றும் வாழ்த்துகள்!

0

இந்த இடுகையை கோராவில் காண்க

தமிழ் கோரா இணையதளத்தில் என்னுடன் இணைந்திடுங்கள்!

Ready for the Leap?

Now rev-up your creative engines and wait for my E-mail! I will get in touch with you as soon as humanly possible!

WhatsApp me if you have any questions