கேள்வி

எந்த ஒரு தொலைக்காட்சி சேனலையும் பார்க்க பிடிக்கவில்லை ஏன்? ஒருதலை அரசியல், கார்ப்பரேட் விளம்பரங்கள் மற்றும் செய்திகள், சூதாட்ட விளையாட்டு, யதார்த்தமற்ற நிகழ்ச்சிகள் போன்ற உணர்வு ஏற்பட காரணம் என்ன?

என் பதில்

உங்கள் ஏழாவது அறிவும், மூன்றாவது கண்ணும் விழித்துக்கொண்டதன் அறிகுறியே இது… இந்த நிலையை அறிவுரை கேட்டெல்லாம் யாராலும் அடைய முடியாது…

எது இந்த மக்கள் கூட்டத்தை மாக்கள் கூட்டமாக வைத்திருக்கிறதோ அது உங்களுக்கு *பிடிக்காமல்* போயிருக்கிறது. இது ஒரு வரம்.

இனி சரியான முறையில் திட்டமிட்டு உங்கள் வாழ்க்கையை கவனச்சிதறல் இல்லாமல் செலுத்தினால் எல்லாமே ஏறுமுகம் தான்! நீங்கள் ஒரு சிறுப்பிள்ளைத்தனமான, மந்தைத்தனமான ஒரு வஸ்துவிடம் இருந்து விடுதலை பெற்றிருக்கிறீர்கள். இதிலிருந்து என் குடும்பத்தாரையும் நண்பர்களையும் மீட்க நாயாய் கத்திக்கொண்டிருக்கிறேன், ஆனால் அவர்களுக்கு இது *பிடித்திருக்கிறது*. உங்களுக்கு பிடிக்கவில்லை, வெற்றிகளுக்கு வாழ்த்துகள்.

0

இந்த இடுகையை கோராவில் காண்க

தமிழ் கோரா இணையதளத்தில் என்னுடன் இணைந்திடுங்கள்!

Ready for the Leap?

Now rev-up your creative engines and wait for my E-mail! I will get in touch with you as soon as humanly possible!

WhatsApp me if you have any questions