கேள்வி

கண்ட இடங்களில் எச்சில் துப்புபவர்கள் பற்றி உங்கள் கருத்துகள் என்ன? இதற்கு தீர்வு என்ன?

என் பதில்

எனக்கு இதில் வேறு ஒரு கோணத்தில் பதில் கிடைக்கிறது. மற்ற உலக நாடுகளோடு ஒப்பிடுகையில் நம் நாட்டில், சங்க காலம் தொட்டே (உறுதியா தெரியல, ஆதாரமெல்லாம் கேக்காதீங்க! ) வெற்றிலை, பாக்கு, சீவல், புகையிலை போடும் வழக்கம் அதிகம் உள்ளது. துப்புவது நம் மரபணுவில் புதைந்து கிடைக்கும் ஒரு வழக்கமாகவே பார்க்கிறேன். நாகரிக கல்வி, வாழ்க்கை முறை என நம்மில் பெரும்பாலானவர்கள் பாக்கு, வெற்றிலை இதெல்லாம் போடாமல் வளர்க்கப்பட்டதால், துப்புபவர்களைப் பார்த்தால் அப்ப வேண்டும் எனத் தோன்றுகிறது.

அதற்கு அடிப்படைக்காரணம், நம்மால் இப்படி துப்ப முடியாமல் போனதே என்ற உளவியல் ஆதங்கமாகவும் இருக்கலாம்! (யார் கண்டா, கொளுத்திப் போடுவோம்!)

தவிர, சங்க காலத்திலோ, அல்லது 100 வருடங்களுக்கு முன்பு வரை கூட நம் நாடு விவசாய நாடு, அக்மார்க் இயற்கை வாழ்வியல். எங்கு துப்பினாலும் இயற்கை அதை தமதாக்கிக் கொள்ளும்! மறுசுழற்சி செய்யும்! தற்போது தான் நாம் அதிநவீன மற்றும் பளபளப்பான ஐடி காரிடார் கட்டிடங்களில் புழங்கி வருகிறோம். துப்புவது மண்ணோடு சேர்ந்து மக்கிப் போகும் வரை அது அசுத்தமாக தெரியவில்லை, மார்பிள் தரையிலோ, தார் ரோட்டிலோ, சிமெண்ட் சுவற்றிலோ துப்பும் போது அசுத்தமாக தெரிகிறது! சரிதானே?

எல்லாவற்றிற்கும் மேலே, துப்புவது என்பது மூச்சு விடுவது, தண்ணீர் குடிப்பது, வாயு பிரிவது, ஏப்பம் விடுவது போல மனித உடலின் ஒரு இயல்பே! பாக்கு போட்டால் கொஞ்சம் அதிகம் துப்புகிறார்கள். (ஆனால் நான் புகையிலை, ஹான்ஸ் போன்றவற்றை ஆதரிக்கவில்லை)

வக்கனையாக பேசுபவர்கள் கூட ஜலதோசம் வந்து நெஞ்சில் சளி நின்றால் எங்கோ பொது இடத்தில் துப்பித்தான் ஆகவேண்டும். நாகரிகம் என நினைத்து துப்பாமல் இருந்தால் உடலில் சளி தங்கி பெரும் நோய்களுக்கு வித்திடும்.

இதற்கு தீர்வு தான் என்ன? இப்போதைக்கு ஒன்னும் பண்ண முடியாது என்றே தோன்றுகிறது. புற்றுநோயை உண்டாக்கும் என்று லேபிள் ஒட்டி விற்பதனால் சிகரெட்டும் பான் பராக்கும் விற்பனை குறைவை சந்திக்கவில்லை. இவை தான் மோசமான எச்சில் சேர்மத்தை உருவாக்குகின்றன.

  1. அபராதம், தண்டனை எல்லாம் இந்த நாட்டில் ஒரு பலனும் அளிக்காது. விட்டுடுவோம், நெக்ஸ்டு…
  2. துப்புகிறவர்களால் துப்புரவு தொழிலாளர்களுக்கு நோய் பரவுவது போல குறும்படம் எடுத்து சினிமா இடைவெளியில் காட்டலாம், ஒன்னு ரெண்டு பேரு திருந்தலாம், அல்லது ரோசம் கொண்டு நாட்டையே திருத்தவும் செய்யலாம்.
  3. நாமே துப்புகிறவர்களைக் கண்டால், அன்பாக பேசிப் பார்க்கலாம். (ரெண்டு ரூவா தான் டா கேட்டேன், வாயில இருக்க பா*** ப***க்கை பொளிச்சுன்னு மூஞ்சுலயே துப்பிட்டான் எனும் வடிவேலுவின் வரலாற்று நிகழ்வை நினைவில் வைத்துக்கொள்ளவும்! ஒரு 3-4 அடி தள்ளி நின்னே அன்பா பேசுங்க)
  4. துப்பார்க்கு துப்பாய எனும் குறளை கொஞ்சம் மாற்றம் செய்து, ஹிப் ஹாப் தமிழர் ஆதி அவர்களை வைத்து ஒரு பாடல் வெளியடலாம்.
  5. #துப்புனாஅப்புவேன் எனும் ஹாஷ்டேகில் எடப்பாடி, மோடி, அமித்ஷா, சாருக் கான், சமந்தா, விஜய் என பலரையும் ட்வீட் செய்ய வைக்கலாம்!

இறுதியாக, நாம துப்பாம இருக்கலாம்!

நன்றி!

0

இந்த இடுகையை கோராவில் காண்க

தமிழ் கோரா இணையதளத்தில் என்னுடன் இணைந்திடுங்கள்!

Ready for the Leap?

Now rev-up your creative engines and wait for my E-mail! I will get in touch with you as soon as humanly possible!

WhatsApp me if you have any questions