கேள்வி

சாக்லேட்டுகள் மிகவும் கவர்ச்சியூட்டும்போது, அவற்றை ஒருவித வைட்டமின்கள் அல்லது ஆரோக்கியம் கொடுக்கும் பொருட்களுடன் ஏன் பேக் செய்யக்கூடாது?

என் பதில்

அதிகம் process செய்யப்படாத இயற்கை உணவுகளை பழக்கப்படுத்துவதே சிறந்தது.

கவிதைக்குத்தான் பொய் அழகு, ஆரோக்கியத்திற்கு அல்ல. நம் உடலே உணவை செரித்து ஊட்டச்சத்துகளை கிரகித்துக் கொள்வது தான் சிறந்தது. இப்படிப்பட்ட தயாரிப்புகள் நம் சந்தையில் இல்லை என்பது சந்தோசமான செய்தியே.

Fortification எனப்படும் செறிவூட்டுதல் பற்றி பல முரணான கருத்துகளும் ஆராய்ச்சி முடிவுகளும் உலவுகின்றன. எண்ணெயில் வைட்டமின் டி, பிஸ்கெட்டில் கால்சியம், உப்பில் அயோடின் என இவை எதுவுமே உடலால் கிரகித்துக்கொள்ளக்கூடிய வகையில் ஊட்டச்சத்துகளை கொண்டுள்ளனவா என்று தெரியாது. போதாக்குறைக்கு லேபிளை படித்தால் அந்த ஊட்டச்சத்து பெயரளவுக்கு மட்டுமே சேர்க்கப்பட்டு, மார்கெட்டிங் மட்டும் பெரிதாக செய்யப்பட்டிருப்பது தெரியும்.

ஒரு பாக்கெட் பிஸ்கெட் 4 கிளாஸ் பாலுக்கு சமம் என்பார்கள், மைதாவும் சக்கரையும் உடலுக்கு செய்து விட்டுப்போகும் உண்மையை சொல்ல மாட்டார்கள்.

உணவு என்பது, துளிர்த்து, காய்த்து, கனிந்து, விளைந்ததாக இருக்க வேண்டும். அரைத்து, எரித்து, நசுக்கி, மலடாக்கப்பட்டு, பேக் செய்யப்பட்டதாக இருக்கக்கூடாது. அம்புட்டுதேன்! குழந்தைகளை ஏமாற்ற வேண்டிய அவசியத்தை நாமே ஏற்படுத்துகிறோம்! தவிர்க்கலாம். நன்றி!

🙂

0

இந்த இடுகையை கோராவில் காண்க

தமிழ் கோரா இணையதளத்தில் என்னுடன் இணைந்திடுங்கள்!

Ready for the Leap?

Now rev-up your creative engines and wait for my E-mail! I will get in touch with you as soon as humanly possible!

WhatsApp me if you have any questions