கேள்வி

சிவபெருமான் மற்றும் இயேசுநாதரின் சிறுவயது நாட்கள் பற்றின விளக்கங்கள் ஏன் இன்னும் கேள்விக் குறிகளாகவே இருக்கின்றது?

என் பதில்

இந்தக் கேள்விக்கு ஒரு பக்தனாகவோ, ஆத்திகனாகவோ எனக்கு பதில் தெரியவில்லை. @C.V.Rajan ஐயா அவர்களைப் போன்ற சான்றோரிடம் பதில் கிடைக்கலாம்! ஆனால், சில பல வருடங்களுக்கு முன்பு, நான் நாத்திகனாக இருந்த காலத்தில் இப்படி ஒரு கேள்விக்கு (விதண்டாவாதமாய்?) ஒரு பதில் சொன்னேன், நண்பன் ஒருவனுடன் உரையாடும்போது, இந்தக் கேள்வியை அவன் கேட்டான். அந்த பதில் இப்போதும் ஒரு சுவாரசியமான கோணத்தை அளிப்பதாக நினைக்கிறேன்.

அவர்களின் இளமைப்பருவம் கேள்விக்குறியாய் இருப்பதற்கு காரணம், அவர்கள் கற்பனைப்பாத்திரங்கள் என்பதே! சினிமா, நாவல், நாடகம் என மனிதர்களின் கற்பனையில் உருவான ஆக்கங்களில் எல்லாம், கதாநாயகனின் எந்த பருவத்தில் கதை நடக்கிறதோ அதுவே படைக்கப்படும். அந்த கதாநாயகனுக்கு இளமையும் கிடையாது, முதுமையும் கிடையாது.

அவை நம்மிடம் இருந்து மறைக்கப்படவில்லை, ஆனால் நமக்கு எது தேவையோ அது மட்டும் காட்சிப்படுத்தப் படுவதால் நமக்கு அவை தெரிவதில்லை. நாமும் அதை தேடிக் காண முடியாது. அது அந்த இயக்குநரின் கற்பனையில் மிதந்து கொண்டிருக்கும் ஒரு நியூரான் இணை! அவ்வளவே.

எந்த இனத்திற்கும் இல்லாத ஒரு திறன் மனிதனுக்கு உண்டு, அது என்ன என்றால் சிரிப்பு என்று பலர் சொல்வார்கள். என்னைக்கேட்டால், கற்பனைத்திறன் என்பேன். கற்பனைத்திறன், இவ்வுலகின் சுழற்சியைத்தவிர மீதி எல்லாவற்றையும் மாற்றவல்லது, மாற்றிக்கொண்டிருப்பது. அந்த கற்பனையின் உருவங்களுக்கு ஆரம்பமும் முடிவும் இல்லை, போலவே கடவுள்களுக்கும்!

நான் பின்னர் சிவன், பிள்ளையார் மற்றும் முருகனின் தீவிர பக்தனாகிப்போனேன். எந்த திருப்புமுனையும் கஷ்டகாலமும் என்னை பக்தி மார்க்கத்தில் திருப்பவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. ஏதோ ஒரு தேடல், சில அனுபவங்கள் (mostly இனிமையான மற்றும் நேர்மறையான) நிகழ்வுகள் இதெல்லாம் என்னை பக்குவப்படுத்தி சாமி கும்பிட வைத்தது.

ஆனால் இன்றும் என்னுடைய இந்த வாதத்திற்கு என்னாலேயே விடை காண முடியவில்லை. தேடிக்கொண்டே இருப்பேன். வாசித்தமைக்கு நன்றி!

0

இந்த இடுகையை கோராவில் காண்க

தமிழ் கோரா இணையதளத்தில் என்னுடன் இணைந்திடுங்கள்!

Ready for the Leap?

Now rev-up your creative engines and wait for my E-mail! I will get in touch with you as soon as humanly possible!

WhatsApp me if you have any questions