கேள்வி

நான் ஒரு சாக்லேட் விரும்பியாக உள்ளேன். தினமும் சராசரியாக 300 கிராம் சாக்லேட் சாப்பிடுவேன். இதன் நன்மை தீமை என்ன?

என் பதில்

என்ன வகையான சாக்லேட் என்பதை பொறுத்து நன்மை தீமைகள் மாறுபடும்!

என் குழந்தைப்பருவத்தில் மானாவாரியாக பாரின் சாக்லெட்டுகள் சாப்பிட்டு பற்கள் பாழாய்ப் போனதும் செரிமான மண்டலம் பலவீனமானதும் தான் மிச்சம்!

ஆனாலும் சாக்லேட் காதல் தீர்ந்த பாடில்லை, கொஞ்சம் வெவரம் புரிஞ்ச பின்னாடி, அதாவது 20 வயசுக்கு மேல, ஒன்லி டார்க் சாக்லேட் அல்லது கசக்கும் பிட்டர் சாக்லேட்! ஆனால் அளவைக்குறைத்துக்கொண்டேன். ஒரு 300 கிராம் சாக்லேட் பார் வாங்கினால் 10–12 நாட்கள் கொஞ்சம் கொஞ்சமாக இரசித்து சாப்பிடுவேன். Sugar, Emulsifier, Antioxidant, milk solids, preservatives, Cadburys, Nestle இந்த வார்த்தைகள் லேபிளில் இருந்தால் அந்த சாக்லேட்டை தொடவே மாட்டேன்!

Candy, Eclairs வகையைச்சேர்ந்த மிட்டாய்கள் எல்லாம் சாக்லேட் வகையை சேராது! அது ஒரு misnomer. தவறான கல்வித் திட்டத்தால் (!) இந்த எண்ணம் 90s குழந்தைகளுக்கு விதைக்கப்பட்டு பல் டாக்டரிடம் கப்பம் கட்டும் நிலை நேர்ந்து விட்டது. அவை sugar boiled confectionary, சக்கரைப் பாகு எனவே அதனை தயவு செய்து தொடவோ, குழந்தைகளுக்கு வாங்கிக் கொடுக்கவோ செய்யாதீர்கள். ஒரு தலைமுறையை காத்த புண்ணியம் கிட்டும்!

சாப்பிடும் முறை: சாக்லேட்டை கடித்து சாப்பிடக்கூடாது!!! நட்ஸ் கொண்ட சாக்லேட்டாக இருந்தாலும், ஒரு துண்டை வாயில் வைத்து, நாவினால் பந்தாடி, உமிழ்நீருடன் துளித் துளியாய் காதலாகிக் கசிந்துருகி உண்ண வேண்டும்.

இப்போது இந்தியாவில் அறுவடை செய்யப்பட்ட கோகோ கொட்டைகளால் செய்யப்படும் artisan Indian origin chocolate bars அதிகம் கிடைக்கின்றன.

உங்கள் சாக்லேட் காதல் இனிதே தொடர வாழ்த்துகள்!

0

இந்த இடுகையை கோராவில் காண்க

தமிழ் கோரா இணையதளத்தில் என்னுடன் இணைந்திடுங்கள்!

Ready for the Leap?

Now rev-up your creative engines and wait for my E-mail! I will get in touch with you as soon as humanly possible!

WhatsApp me if you have any questions