கேள்வி

வேகமாக மாறி வரும் மென்பொருள் துறையினால் எப்பொழுது மனித இனம் தங்கள் வேலை மற்றும் வருமானம் இழக்க நேரிடும்?

என் பதில்

என்னைக்கேட்டால் மிக வேகமாக வளரும் மென்பொருள், செயற்கை நுண்ணறிவு போன்ற தொழில்நுட்பஙகளால் மனிதர்களுக்கு வேலைக்கு போகும் அவசியமே அற்றுப் போகும் என்று நேர்மறையாகத் தான் சொல்லுவேன்!

ஓரிடத்தில் இருந்து இன்னொரு இடத்திற்கு நகர எப்போது சக்கரம் கண்டுபிடித்தானோ, பாரத்தை தூக்க எப்போது நெம்புகோலை கண்டுபிடித்தானோ அப்போதே மனிதனின் வேலைகளை சுலபமாக்குவது எப்படி எனும் தேடல் தொடஙகி விட்டது!

உணவுக்காகத் தான் உழைக்க ஆரம்பித்தான் மனிதன். அதுவே மெல்ல வளர்ந்து வளர்ந்து அடுத்தவனை வேலை செய்ய வைத்து தான் சும்மா இருக்கலாம் எனும் முதலாளித்துவ சிந்தனை, பொருளாதாரம் ஆகிய கோட்பாடுகளால் இன்று வேலை, ஊதியம் என்று நிற்கிறது. இப்போது நம் உழைப்புக்கும் உணவுக்கும் இடையேயான இடைவெளி அதிகமாகிவிட்டது. யாரோ உழைக்க யாரோ உண்டு களிக்கிறார்கள். எங்கோ ஒரு விவசாயி உழைக்க நான் இங்கே 2 வேளை சுவையாக சாப்பிடுகிறேன். நானும் அறிவால் உழைக்கிறேன்(அது உழைப்பு என்றால்) ஆனால் உணவுக்காக அல்ல, அதை வாங்க தேவையான காசுக்காக. எனக்கு மேலே ஒருவர் என்னை விடவும் அதிகம் சம்பாதித்து, அதில் ஒரு பங்கை எனக்கு ஊதியமாக தருகிறார்.

எனக்கு கீழே ஒருவனை வேலைக்கு வைத்து அவனுக்கு ஊதியமாக நான் ஒரு தொகையை கொடுக்க வேண்டும், அவன் அதை வைத்து உணவும் நீரும் வாங்குவான், இப்படி இருக்கும் இந்த சங்கிலியில், ஊதியமே வாங்காமல் ஒரு அப்ரசண்டி எனக்காகவும் உழைத்து, என் உணவுக்காகவும் திட்டமிட்டால்? அது தான் செயற்கை நுண்ணறிவு. மனித இனத்தின் “சும்மா இருக்க கத்துக்கனும்” தேடலின் உச்சமாக மென்பொருள் துறை இருக்கும். அதுவும் வணிகமயமாக இருக்கத்தான் செய்கிறது, ஆனால் இன்னும் சில ஆண்டுகளில் மனிதனுக்கு பூமியை அழித்துக்கொண்டிருப்பது உரைக்கத் துவங்கி விடும், பணம், பொருளாதாரம் இதனை எல்லாம் equation-ல் இருந்து நீக்கி விட்டு அனைவருக்கும் அனைத்தும் சமம் எனும் கோட்பாட்டிற்கு மனிதன் நுழைவான், வாழ்வாதாரமே அந்த சமன்பாட்டின் பிரதானமாக இருக்கும். அதற்கு மென்பொருளும், செயற்கை நுண்ணறிவும் உதவும்.

உற்பத்தி, ஆக்கம், பொறியியல் என சகல துறைகளிலும் மனிதர்கள் வேலை செய்வார்கள் ஆனால் மென்பொருளும், செயற்கை நுண்ணறிவும் அந்த வேலைகளை எல்லாம் பல மடங்கு எளிமையாக செய்ய உதவும், ஆனால் அவற்றிற்கு சம்பளம் கிடையாது. நிரலாக்கம் மட்டுமே அதன் பிரதானம்.

எனக்கு 28 வயது, என் காலத்திற்குள் அப்படி ஒரு உலகை காண்பேன் என நம்புகிறேன். பதிலில் ஏதும் பிழை இருப்பின் சுட்டிக்காட்டவும், தவறுகளை மன்னிக்கவும். கேள்விக்கு நன்றி!

0

இந்த இடுகையை கோராவில் காண்க

தமிழ் கோரா இணையதளத்தில் என்னுடன் இணைந்திடுங்கள்!

Ready for the Leap?

Now rev-up your creative engines and wait for my E-mail! I will get in touch with you as soon as humanly possible!

WhatsApp me if you have any questions