கேள்வி

60-களை கடந்து கொண்டிருக்கும் ஒரு முதியவருக்கு இந்த காலத்தில் சாதிக்க என்ன இருக்கிறது? Youtube, WhatsApp போன்ற செயலிகளை முதியவர்கள் எப்படி பயன்படுத்தலாம்?

என் பதில்

60-களை கடக்கும் முதியவரான நீங்கள்? உங்களுக்கு இந்தக் காலத்தில் சாதிக்க என்ன இல்லை? நீங்கள் ஒரு அனுபவ மூட்டை, உங்கள் அனுபவங்களே உங்களது புதையல், 60 ஆண்டுகளாக தாங்கள் கடந்து வந்த பயணத்தை இந்த தலைமுறைக்கு நீங்கள் ஒவ்வொன்றாக விளக்கும் விதமாக காணொளிகள், ஒலிப்பதிவுகள் என youtube whatsapp போன்றவற்றில் வெளியிடலாம்.

போன தலைமுறையில் நீங்கள் செய்த எந்த சிறு தவறுகள் எல்லாம் இன்று பூதாகரமாக உருவெடுத்து பூமியை அழித்துக்கொண்டிருக்கிறது என ஒரு முதியவர் confession video வெளியிட்டால் இந்த தலைமுறைக்கு மிக நன்றாக இருக்கும்.

என் தாத்தா சில முறை புலம்புவார், “நாம இருக்க தெருவே ஒரு காலத்தும் 1000 ரூவாய்க்கு விலைக்கு வந்துது, ஆனா அந்த காச கொண்டு போய் லாட்டரியில் போட்டு வீணாக்கினேன்” என்று. இன்னொரு முதியவர், நண்பர் வீட்டு மாடியில் இருக்கிறார், அவர் புலம்பல் இது, “அப்பவே இந்த பிளாஸ்டிக் பத்தி இம்புட்டு விஷயம் தெரிஞ்சிருந்தா எங்க ஊருல பிளாச்டிக் கம்பெனி தொடங்கும் போதே தடுத்து நிறுத்தியிருப்போம்!”

மேலும் ஒரு தாத்தா, “எங்க அப்பா நிலத்துல இருந்த தென்னை மரம், மாமரத்தை எல்லாம் அறுத்து பிளாட் போட்டு வித்து காசாக்கினேன், எல்லாம் பிள்ளைகளுக்கு செய்யத் தான், வெளியூரில் நல்லா படிச்சு பாரின் போற வரைக்கும் தான் என் தேவை இருந்தது போல, இன்னைக்கு காசும் இல்ல, மரங்களும் இல்ல, முதியோர் இல்லத்துல என்னை வந்து பாக்கவும் யாரும் இல்ல. அந்த மரங்களை வெட்டாம, அந்த நிலத்துலயே எளிமையா என் பிள்ளைகளை வளர்த்து உள்ளூரிலேயே படிக்க வெச்சிருந்தா இன்னிக்கு இப்படி புலம்பிக் கொண்டிருக்க மாட்டேன். எல்லாம் விதி, இன்னைக்கு அத்தனை மரங்களை நட்டு வளர்க்க 50 வருடமாவது ஆகும்!”

இப்படி உங்கள் புலம்பல்கள் எல்லாம் இந்த தலைமுறையின் படிப்பினைகளாக மாற்றலாம். பாடங்கள் எல்லாம் இனி இணையத்தில் தான். உங்கள் வாழ்க்கையையே ஒரு பாடமாக மாற்றுங்கள். எப்படி வாழ வேண்டும் என்றும் இருக்கலாம், எப்படி வாழக்கூடாது என்றும் இருக்கலாம். ஆனால் அந்த அனுபவம் அடுத்த தலைமுறைக்கு கடத்தப்பட வேண்டும். இதனையே உங்களை போன்ற முதியோர்களிடம் இருந்து இளம் தலைமுறையினர் எதிர் பார்க்கிறோம்! கேள்விக்கு நன்றி!

0

இந்த இடுகையை கோராவில் காண்க

தமிழ் கோரா இணையதளத்தில் என்னுடன் இணைந்திடுங்கள்!

Ready for the Leap?

Now rev-up your creative engines and wait for my E-mail! I will get in touch with you as soon as humanly possible!

WhatsApp me if you have any questions