கேள்வி

90களின் குழந்தையாக நீங்கள் எந்தெந்த பொய்களை எல்லாம் நம்பியுள்ளீர்கள்?

என் பதில்

எத்துணை அழகான ஆழமான நினைவுகளைத் தூண்டும் பதில்கள்!

இவற்றை ஈடு செய்யும் அளவிற்கு என்னிடம் பதில் இல்லை, ஆனால் நானும் சிலவற்றை நம்பினேன்! அவை பின்வருமாறு,

1. என் அப்பாவைப் போல வளர்ந்த பின் ~20 ரூபாய்க்கு பெட்ரோல் நிரப்பி டிவிஎஸ் 50-இல் ரவுண்டு அடிக்கலாம் என நம்பினேன்! இப்ப 80 ரூபாய் தொட்டாச்சு, ஹோண்டா பைக்கை ஆயுத பூசைக்கு கழுவி ஓரமா நிறுத்தி வெச்சுட்டு சைக்கிளிலேயே சுற்றுகிறேன்.

2. எங்கள் ஊர் நதிகளில் எப்போதும் தண்ணீர் இருக்கும் என நம்பினேன்.

3. எங்கள் வீட்டுக் கிணறு வற்றாது என நம்பினேன். இன்னிக்கு கிணத்தக் காணோம்!

4. பேப்பர் கப்பலும் ராக்கெட்டும் செய்ய கிழிக்க கிழிக்கக் குறையாத அட்சயப் புத்தகம் ஒன்று இருக்கிறது என நம்பினேன்.

5. காலண்டரில் தேதி கிழிக்காவிட்டால் அந்த நாள் இன்னும் முடியாமல் இருக்கும் என நம்பினேன்.

6. கஷ்டப்படுபவர்களைப் பார்த்து பாவம் என வாய்விட்டு சொன்னால் நமக்கும் அந்த கஷ்டம் ஒட்டிக் கொள்ளும் (என எவனோ என்னிடம் புருடா விட்டதை) நம்பினேன்.

7. என் நண்பர்கள் எல்லாரும் நண்பர்களாகவே இருப்பார்கள் என நம்பினேன்.

8. அறிவியல் வளர்ச்சி இயற்கையைக் காக்கும் என நம்பினேன்.

9. கல்வி நம் பாரம்பரியத்தை நிலை நாட்டும் என நம்பினேன், மாறாக அது நம் கலாச்சாரத்தை அவமானாகவே கருதும் அளவிற்கு கொண்டு செல்கிறது என நினைக்கிறேன்.

10. அவர் முதலமைச்சராக வருவார் என நம்பினேன். (நல்ல வேளை அப்ப எங்களை மாதிரி சின்னப்புள்ளைங்களுக்கெல்லாம் ஓட்டுரிமைஇல்ல, இருந்திருந்தா யார் யாரெல்லாம் முதலமைச்சரா வந்திருப்பாங்களோ, கற்பனையா ஒரு பதில் எழுதுங்கப்பா!​)

0

இந்த இடுகையை கோராவில் காண்க

தமிழ் கோரா இணையதளத்தில் என்னுடன் இணைந்திடுங்கள்!

Ready for the Leap?

Now rev-up your creative engines and wait for my E-mail! I will get in touch with you as soon as humanly possible!

WhatsApp me if you have any questions