கேள்வி

Creativity என்றால் என்ன? அதனை எப்படி வளர்ப்பது? அதற்கு புத்தகம் உள்ளதா?

என் பதில்

Creativity என்பது புதுமையாக ஒன்றை உருவாக்குவதோ, இல்லாத ஒன்றை தேடிக் கண்டுபிடிப்பதோ அல்ல.

இலைமறையாக இருக்கும் ஒரு ஒற்றுமையை, ஒருமையை காண இயல்வதே creativity. உதாரணமாக, வானம் இருக்கிறது, அதில் ஒரு வெண்மேகம் மிதக்கிறது. ஒரு கவிஞனின் creativity அதனை ஒரு வெண்பஞசாகவோ, செம்மறி ஆட்டுக்குட்டியாகவோ இணைத்து கற்பனை செய்து பார்க்கத் தூண்டுகிறது. சாமானியனுக்கு, அடடே ஆச்சர்யக்குறி என அந்தக் கவிதையை பாராட்டத் தோன்றுகிறது.

Creativity – யை வளர்க்க என்று புத்தகங்கள் இருப்பதாக தெரியவில்லை, ஆனால் நிறைய வாசிக்கும் பழக்கம் இருந்தால் creativity நிச்சயம் வளரும். ஏனென்றால், திரைப்படமோ டிவி நிகழ்ச்சியோ நம்மை சிந்திக்க வைப்பதில்லை, இன்னொருவரின் சிந்தனையை, கற்பனையை நமக்கு spoonfeed செய்கிறது. ஆனால் வாசித்தல் நம்மை இயக்குனராகவும், ஒளிப்பதிவாளராகவும் இறுதியில் இரசிகனாகவும் வாய் பிளக்க வைக்கிறது.

நிறைய வாசிங்க, நிறைய யோசிங்க. அறிவியல் பூர்வமாகவும் நிரூபிக்கப்பட்ட உண்மை என்னவென்றால், அதிகம் புது விசயங்களை கற்றுக்கொள்ளும் போது, மூளையில் உள்ள நியூரான் இணைப்புகள் பல்கிப் பெருகுவதால் கற்பனைத் திறன் வளரும்.

போனஸ் டிப்: திருமணம் ஆனவர் என்றால் மனைவிக்கு தெரியாமல் ஏதாச்சும் (சின்ன) தப்பு செஞ்சிட்டு அவஙககிட்ட இருந்து தப்பிக்க முயற்சி பண்ணுஙக. கண்டிப்பா மாட்டிக்குவீங்க, ஆனா மாட்டிக்கிட்ட பின் சமாளிக்க உதவுவது creativity க்கி சிறந்த பயிற்சியா இருக்கும்! கிகிகி 😉

வாசித்தமைக்கு நன்றி!

0

இந்த இடுகையை கோராவில் காண்க

தமிழ் கோரா இணையதளத்தில் என்னுடன் இணைந்திடுங்கள்!

Ready for the Leap?

Now rev-up your creative engines and wait for my E-mail! I will get in touch with you as soon as humanly possible!

WhatsApp me if you have any questions